அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் - திருச்சி சிவா நோட்டீஸ்!
notice
rajyasabha
trichy siva
By Anupriyamkumaresan
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டிலும் ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கமாகும்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது லையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முழுமூச்சுடன் போராடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்திலும் மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13-ந் தேதி முடிகிறது. தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், கேட்டுக் கொண்டார்.
இந்தநிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விதி 267 ன் கீழ் அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவையில்
திமுக உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ் விடுத்துள்ளார்.