மேகதாதுவுக்கு எதிர்ப்பு - மத்திய அமைச்சருடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்த சந்திப்பில் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்றும், அணையை கட்டினால் தமிழகத்தின் நீராதாரம் பாதிக்கப்படும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
மேகதாது அணைக்காக பிரதமரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா மாலையில் சந்திக்கும் நிலையில் வலியுறுத்தியுள்ளனர்.
இதில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி,
காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, பாமக சார்பில் ஜி.கே.மணி, பாஜக சார்பில் பால்
கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய
மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்
வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.