மேகதாது விவகாரம் - தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்!!
மேகதாது அணை கட்டும் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, பா.ஜ.க, ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.
கர்நாடகவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த அணை கட்டி
முடிக்கப்பட்டால், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறையும் என்பதால், அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை
மேற்கொண்டு வருகிறது.