இது வெடித்தால் ஒரே நிமிடத்தில் பாதி அமெரிக்கா கடலில் மூழ்கும் - எச்சரிக்கை!
அமெரிக்காவைச் சீக்கிரமே பேரழிவு தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரழிவு
PNAS எனப்படும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி வட அமெரிக்கா எதிர்கொள்ளும் இயற்கை பேரழிவு அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு செய்து எச்சரித்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா வரை இருக்கும் 1,000 கி.மீ நீளமுள்ள காஸ்கேடியா சப்டிடக்ஷன் மண்டலம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இந்த காஸ்கேடியா மண்டலம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருக்கிறது.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "இது அமைதியாக இருக்கிறது ஓகே. ஆனால் ஒரு கட்டத்தில் நிச்சயம் இது உடையும். அப்போது அது அமெரிக்காவில் மிகப் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தும். இதனால் கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் மற்றும் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா வரை பாதிப்பு ஏற்படும்.
சிக்கும் அமெரிக்கா
கடலோர நகரங்களை 100 அடி உயரம் கொண்ட சுனாமி தாக்கும் ஆபத்தும் இருக்கிறது" என்கின்றனர். தொடர்ந்து பேராசிரியர் டினா டுரா என்பவர் நடத்திய ஆய்வில், ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும்போது, பெரிய நிலப்பரப்புகள் சில நிமிடங்களில் 0.5 முதல் 2 மீட்டர் வரை மூழ்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "காலநிலை மாற்றத்தால் கூட ஆண்டுக்கு அதிகபட்சம் 4 செமீ வரை மட்டுமே கடல் நீர்மட்டம் உயரும். ஆனால், இங்கு நிலநடுக்கத்தால் நிமிடங்களில் இரண்டு மீட்டர் வரை கூட நிலம் மூழ்குகிறது. ஆனால், இதைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.