பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவு

M K Stalin Rahul Gandhi
By Thahir Jun 23, 2023 10:50 AM GMT
Report

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவு

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்த சற்று காலதாமதமாக நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது.

இந்த கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளனர்.

meeting of opposition leaders in Patna concluded

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்,

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் மற்றும் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.