தேமுதிக வில் இருந்து விலகிய மீசை ராஜேந்திரன்
தேமுதிக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் மீசை ராஜேந்திரன்.
31 ஆண்டுகளாக விஜயகாந்த் நற்பணி மன்றத்திலும், 20 ஆண்டுகளாக தேமுதிக கட்சியிலும் பயணித்து வந்த மீசை ராஜேந்திரன் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மீசை ராஜேந்திரன், விஜயகாந்தின் தீவிர விசுவாசியாக இருந்தவர் தேமுதிக-வில் இணைந்து கொண்டு அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், விசுவாசத்திற்கு இடம் இல்லாததால் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
வேறு கட்சியில் இணைவது குறித்து தற்போது வரை எந்தமுடிவும் எடுக்கவில்லை என்றும், மற்ற கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் இணைவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
