கைதுக்கு முன் கதறிய நடிகை மீரா மிதுன்- சர்ச்சையாகும் வீடியோ
குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீராமிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை மீராமிதுன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்டார். அதில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதோடு, அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு நடிகை மீராமிதுன் வெளியிட்ட வீடியோ
— Don Updates (@Don_Updatez) August 14, 2021
⚠️? pic.twitter.com/DnxuihZnQ0
மேலும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் குற்றப்பின்னணியை உடையவர்களாக இருப்பதாகவும் கூற அந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
இந்நிலையில் நடிகை மீராமிதுன் கேரளாவில் வைத்து சைபர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு சென்றுள்ளார்.

அதில், என்னை கைது செஞ்சா குத்திட்டு செத்திடுவேன் என கதறி அழுதுள்ளார், மேலும், தமிழ்நாடு போலீஸ் என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்ராங்க என்றும் பிரதமர் மோடி மற்றும் ஸ்டாலின் அவர்களது பெயரையும் கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.