நடிகை மீரா மிதுனுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட்..!
பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதுாறாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

புகாரை பெற்ற போலீசார் தலைமறைவாக இருந்த இருவரையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். இதையடுத்து வழக்கில் இருந்து ஜாமினில் வெளிவந்தார் நடிகை மீரா மிதுன்.
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதிகள் முன்பு விசாணைக்கு வந்தது.விசாரணையில் மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நிதிபதி உத்தரவிட்டார்.
மீரா மிதுனை கைது செய்து வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம் IBC Tamil