மாற்றி மாற்றி பேசும் நடிகை மீரா மிதுன்.. குழப்பத்தில் போலீசார்
காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நடிகை மீரா மிதுன் மாற்றி மாற்றி பேசி வருவதால் அவரை மனநல ஆலோசகர் முன்பு விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மீரா மிதுன் சமீபத்தில் தனது வலைதள பக்கத்தில் பட்டியலின மக்கள் குறித்தும் தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து கேரளாவில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.அப்போது போலீசார் கைது செய்தால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி மிரட்டினார்.

இதையடுத்து அவரை சென்னை அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அப்போது நீதிபதி அவருக்கு ஆகஸ்ட் 27 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிறையில் உள்ள நடிகை மீரா மிதுனை போலீசார் விசாரிக்க முயன்றதாகவும் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மாறி மாறி பேசி வருவதாகவும் அவரை மனநிலை ஆலோசகர் முன்பு வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.