நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க போலீசார் கடிதம்
நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க கோரி குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சமீபத்தில் நடிகை மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கங்களில் பட்டியலின மக்களை பற்றியும் நடிகர்,நடிகைகளை பற்றியும் அவதுாறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அவரின் புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் நடிகை மீரா மிதுனை கேரளாவில் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அப்போது செய்தியாளர்களிடம் மீரா மிதுன் போலீசார் தனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை எனறும் தன்னை கொடுமைபடுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நடிகை மீரா மிதுனை ஆகஸ்ட் 27 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க கோரி யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
யாழில் பாடசாலை நிகழ்வில் சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவதற்கு எதிராக வெடித்தது போராட்டம் IBC Tamil
சஜித்தின் அலுவலகத்திற்கு முதன்முறையாக செல்லவுள்ள ரணில்! முக்கிய சந்திப்பில் நாமலும் இணையக்கூடும்... IBC Tamil
அடையாளங்களை அழிக்க முற்படும் சந்திரசேகர் எம்.பி! கடற்றொழில் சமூகத்தின் பகிரங்க குற்றச்சாட்டு IBC Tamil