நடிகை மீரா மிதுன் ஜாமீன் கோரி மனு தாக்கல்
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்கள் குறித்தும் நடிகர்,நடிகைகளை பற்றியும் அவதுாராக பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு மீரா மீதுன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அவரின் புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஆகஸ்ட் 27 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.அவர்களின் மனு விரைவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது