தெருக்களில் சுற்றித்திரிந்த மீரா மிதுன்; 3 வருஷமா.. தாய் வைத்த கோரிக்கை!
நடிகை மீரா மிதுனை மீட்டு போலீஸார் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன்
பட்டியல் இனத்தவர்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் ஷாம் அபிஷேக் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.
அதில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2022 முதல் வழக்கில் ஆஜராகாமல் இருவரும் தலைமறைவாகினர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மீரா மிதுனை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
தாய் கோரிக்கை
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுனின் தாயார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தன்னுடைய மகள் டெல்லி நகர வீதிகளில் சுற்றித் திரிகிறார். அவரை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, டெல்லி போலீசாரால் மீரா மிதுன் கைது செய்யப்பட்டு
அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தும்படி உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.