மீரா மிதுன் படத்திற்கு வித்தியாசமான டைட்டில் - என்ன தெரியுமா? ரசிகர்கள் ஷாக்
நடிகை மீரா மிதுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு வித்தியாசமான தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவர் மீரா மிதுன். சர்ச்சை பெயர் போன இவரின் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.
மீரா மிதுன் பேய் வேடத்தில் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, ஜெயா டிவி ஜேக்கப், செல்வகுமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் ஆர். சுருளிவேல் இப்படத்தை தயாரித்து வருகிறார். மிஸ்டர் கோளாறு இசையில் உருவாகும் இப்படத்திற்கு ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம் என பல விஷயங்களை வாழ்கையில் தேடியிருப்போம். ஆனால் இந்த படத்தில் முதல்முறையாக பேயை காணோம் என தேடுகிறார்கள்.
எதற்காக பேயை தேடுகிறார்கள் என்பதை முழு நீள காமெடி படமாக எடுத்து வருகின்றனர். 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் நாயகி மீரா மிதுன் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
அவருக்கு ஜாமின் கிடைத்தவுடன் படத்தின் மீதமுள்ள காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘பேய காணோம்’ என்று வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ள இந்த டைட்டிலுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.