கஞ்சா அடித்து சாய் பாபா முகத்தில் புகை விட்ட மீரா மிதுன் - கொந்தளித்த பக்தர்கள்
நடிகை மீரா மிதுன் கஞ்சா அடித்து சாய் பாபா படத்தின் மீது புகை ஊதிய வீடியோ காட்சிகளை கண்டு பக்தர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
WTH !!!
— JoeMichael (@RazzmatazzJoe) August 13, 2021
Pona Week Caste Ippo Religion
This video has been uploaded and deleted in her Account ?
Pls do the needful @mkstalin @chennaipolice_
Modi ji what is this ? @PMOIndia @Murugan_MoS @annamalai_k @RSSorg @Rss @savukku
Find who is Behind Her ?#ArrestMeeraMithun pic.twitter.com/GwewOdIdbf
மாடல் மற்றும் நடிகையாகிய மீரா மிதுன், பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாக கைது செய்தனர்.
கடந்த வாரம் சாதியை இழிவுப்படுத்திய மீரா மிதுன், தற்போது மதத்தை அவமதிக்கும் விதமாக இழி செயலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த வீடியோவை ஜோ மைக்கேல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை மீரா மிதுன் வெளியிட்டு உடனடியாக நீக்கியுள்ளார். அந்த வீடியோவில் நடிகை மீரா மிதுன், கஞ்சா அடித்து அந்த புகையை சாய் பாபா புகைப்படத்தில் ஊதியிருக்கிறார்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், இந்த குற்றத்திற்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.