சிறையில் தவிக்கும் மீராமிதுன் - செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
நடிகை மீராமிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை மீராமிதுன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் குறிப்பிட்ட சமுதாய மக்களை அவதூறாக பேசும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கேரளாவில் அவரை கைது செய்தனர்.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீராமிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020 செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த அவதூறு புகாரின் பேரில் மீராமிதுன் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மீராமிதுன் மற்றும் சாம் அபிஷேக்கின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். இதில் அவர்களுக்கான நண்பரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.