படப்பிடிப்பில் இருந்து தப்பியோடிய நடிகை மீராமிதுன் - அதிரவைக்கும் தகவல்கள்
படப்பிடிப்பில் இருந்து தப்பியோடி விட்டதாக நடிகை மீராமிதுன் மீது இயக்குநர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பிரபலமான நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
இவர் மீரா மிதுன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட்' பட நிறுவனம் சார்பில் தயாராகி வந்த ‘பேய காணோம்’ என்ற படத்தில் பேயாக நடித்து வந்தார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, செல்வ அன்பரசன் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது.
சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் இந்த படப்பிடிப்பில் மீராமிதுன் கலந்து கொண்டார் . இந்நிலையில் படப்பிடிப்பில் ஒருநாள் மீரா சொல்லி கொள்ளாமல் சென்றுவிட்டதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மீராமிதுன் ஜெயிலில் இருந்து வந்தவுடன் முதலில் சென்னையில் படப்பிடிப்பை துவங்கினோம். அதன் பின் இறுதி கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் பின் திட்டமிட்டு அதற்காக படக்குழுவினர் அனைவரும் கொடைக்கானல் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். மேலும், படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இரண்டு நாட்கள் உள்ள நிலையில் திடீரென மீராமிதுன் நள்ளிரவில் 6 பேர் கொண்ட குழுவுடன் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
மறுநாள் காலையில் தான் மேனேஜர் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார். மொத்த படக்குழுவும் அதிர்ச்சி அடைந்து விட்டோம். பேயை தேட போய் கடைசியில் நாங்கள் எங்களது கதாநாயகியை தேட வேண்டிய சூழல் வந்துவிட்டது.
பின் தயாரிப்பாளர் என்னிடம் தற்போது என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார். இத்தனை தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை மீராமிதுன் மதிக்காமல் சென்று விட்டார். அவர் இல்லை என்றாலும் பரவாயில்லை நான் காட்சிகளை வேறு விதமாக எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு படத்தை எடுத்தேன் என தெரிவித்துள்ளார்.