காவல்துறை கண்ணில் சிக்காமல் இருக்கும் மீரா மிதுன் : காரணம் என்ன ?
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீராமிதுன்
கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தென் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர் மீரா மிதுன்.
தன்னை தானே ஒரு சூப்பர் மாடல் என்று கூறிக்கொண்டு வலம் வந்த அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார் மீரா மிதுன்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தென் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர் மீரா மிதுன். தன்னை தானே ஒரு சூப்பர் மாடல் என்று கூறிக்கொண்டு வலம் வந்த அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார் மீரா மிதுன்.
கண்டுபிடிக்கமுடியவில்லை
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு மீரா மிதுனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியான மீரா மிதுனுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
நடிகை மீரா மிதுன் அடிக்கடி தலைமறைவாகி இருக்கும் இடத்தை மாற்றி வருவதாகவும் அதனால் அவரை கைது செய்ய முடியவில்லை என்றும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.