மனநல மருத்துவமனையில் மீரா மிதுன் அனுமதி - என்ன நடந்தது?

Meera Mitun Bigg Boss Crime
By Sumathi Aug 12, 2025 09:12 AM GMT
Report

மீரா மிதுன் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீரா மிதுன்

பட்டியல் இனத்தவர்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் ஷாம் அபிஷேக் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை

meera mithun

கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. அதில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2022 முதல் வழக்கில் ஆஜராகாமல் இருவரும் தலைமறைவாகினர்.

தொடர்ந்து தலைமறைவாக உள்ள மீரா மிதுனை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது தாய் மனு அளித்த நிலையில், டெல்லி போலீசாரால் மீரா மிதுன் கைது செய்யப்பட்டு, அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

திருமணத்தை மீறிய உறவு - யூடியூப் பார்த்து கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி!

திருமணத்தை மீறிய உறவு - யூடியூப் பார்த்து கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி!

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில், அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, "டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் மீரா மிதுன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நல பாதிப்பால் நீதிமன்ற உத்தரவை தனிப்படை போலீஸார் நிறைவேற்றவில்லை.

மனநல மருத்துவமனையில் மீரா மிதுன் அனுமதி - என்ன நடந்தது? | Meera Mithun Admit Mental Health Hospital

இவருக்கு உடல்நலம் தேறி பயணம் செய்ய தகுதியானவர் என மருத்துவர்கள் சான்றளித்ததும் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார் என தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.