நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆக.23க்கு ஒத்திவைப்பு
நடிகை மீரா மீதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் ஷியாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்கள் குறித்தும் நடிகர்,நடிகைகள் குறித்தும் அவதுாறாக பேசி வீடியோ பதிவேற்றியிருந்தார்.
இது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் ஷியாம் அபிஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து நடிகை மீரா மிதுன் மற்றும் ஷியாம் அபிஷேக் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவுக்கு இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனுதாரர் வன்னியரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆக.23க்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.