"கையில காசு இல்லப்பா” - தயாரிப்பாளரால் ஹோட்டலில் மாட்டிக்கொண்ட படக்குழு
ஹோட்டல் ஒன்று பணம் இல்லை என்று தயாரிப்பாளர் தெரிவித்ததை அடுத்து படக்குழுவை பிடித்து வைத்துக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியில் ரோஹித் என்பவர் இயக்கத்தில் ரதி அக்னிஹோத்ரியின் மகன் தனுஜ் விர்வானி, மீரா சோப்ரா உள்ளிட்டோர் நடித்து வந்த படம் குட்டு கி கேர்ள்ஃபிரெண்ட். இதன் படப்பிடிப்பு பனாரஸில் நடந்து வந்தது.
இதனால் தனுஜும், மீராவும் மற்றொரு ஹோட்டலில் தங்கியிருக்க, படத்தின் மற்ற நடிகர்கள்,டெக்னீசியன் குழுவினர் மற்றொரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதில் மற்ற நடிகர்கள்,டெக்னீசியன் குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலில் செலுத்த தயாரிப்பாளர் பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் அங்கு தங்கியிருந்தவர்களை ஹோட்டல் நிர்வாகம் சிறை பிடித்துக் கொண்டனர். இதனிடையே ஹோட்டலில் இருந்து ஒரு வழியாக வெளியே வந்த மூத்த நடிகர் சுகேஷ் ஆனந்த், இந்த படத்தில் நடித்து முடிப்பேன் என்று எனக்கு தோன்றவில்லை. என்ன ஒரு பயங்கரமான அனுபவம். ஹோட்டல் நிர்வாகத்தினர் எங்களை வெளியே விடவில்லை.
இதையடுத்து நான் நடிகை நுபுர் அலங்காரை தொடர்பு கொண்டேன். அவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை டேக் செய்து ட்வீட் செய்தார் என தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பாளரிடம் பணம் இல்லை என்றால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை பிடித்து வைப்பதா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.