சொந்த வீட்டில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்பட்ட பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்
இன்டீரியர் டிசைனர் ராஜிந்தர் மீது நடிகை மீரா சோப்ரா போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்ககளில் நடித்து வரும் மீரா சோப்ரா தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட பல படங்களில் நிலா என்ற பெயரில் நடித்துள்ளார்.இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார். இந்நிலையில் இவர் தன்னுடைய சொந்த வீட்டில் இருந்தே வெளியேற்றப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதில் தற்போது தான் மும்பையில் இருக்கும் அந்தேரி பகுதியில் நிலா புதிதாக வீடு வாங்கியுள்ளேன். இந்த வீட்டில் உள் அலங்கார வேலைகள் செய்வதற்காக இன்டீரியர் டிசைனர் ராஜிந்தர் என்பவரிடம் ரூ.17 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டு, முதல் தவணையாக ரூ.8 லட்சம் கொடுத்தேன்.
இதையடுத்து பனாரஸில் நடந்த சினிமா படப்பிடிப்பிற்கு சென்ற தான் 15 நாட்களுக்கு பின் புதிய வீட்டை பார்க்க திரும்பி வந்த போது தரம் குறைந்த, மலிவான பொருட்களை வைத்து உள் அலங்கார வேலைகள் செய்திருக்கும் விஷயம் தெரிந்து டிசைனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.
மேலும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதில் இன்டீரியர் டிசைனர் ராஜிந்தர் நிலாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.