பிரபல நடிகையின் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா பாசிட்டிவ் - அதிர்ச்சியில் திரையுலகம்

ActressMeena நடிகை மீனா
By Petchi Avudaiappan Jan 05, 2022 10:37 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகை மீனாவின் மொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1990களில் பிரபலமான கதாநாயகியான வலம் வந்த மீனா திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன் லால், கார்த்திக், பிரபு, விஜயகாந்த் மற்றும் அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவரது மகள் நைனிகாவும் விஜய் நடித்த தெறி படம் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

பிரபல நடிகையின் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா பாசிட்டிவ் - அதிர்ச்சியில் திரையுலகம் | Meenas Entire Family Affected By Covid 19

இதனிடையே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை மீனா உள்பட அவரது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தகவலை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “2022ல் எனது வீட்டிற்கு வந்த முதல் பார்வையாளர் கொரோனா. அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால் நான் அதை இருக்க விடப்போவதில்லை. மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். தயவுசெய்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். பொறுப்பாக இருங்கள். இந்த வைரசை பரவ விடாதீர்கள். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என கூறியுள்ளார். 

மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.