அம்மா பத்தி தப்பா பேசாதீங்க : நைனிகா வேண்டுகோள்
தனது அம்மாவை பற்றி தவறாக பேச வேண்டாம் என நடிகை மீனாவின் மகள் நைனிகா தெரிவித்துள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் உச்ச நடிகையாக சாதித்தவர் நடிகை மீனா. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மற்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா.
கணவர் மரணம்
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து மன உளைச்சலுக்கு ஆளான நடிகை மீனா தற்போதுதான் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார்.
தற்போது மீனாவுக்கு தனியார் யூட்யூப் சேனல் ஒன்று சமீபத்தில் மீனா 40 என விழா எடுத்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், போனி கபூர், பிரசன்னா, சதீஷ், ஜீவா, குஷ்பு, ரோஜா, ராதிகா, சங்கீதா, சங்கவி, தேவயானி, ஆர்கே செல்வமணி, இசையமைப்பாளர் தேவா என பலர் பங்கேற்றனர்.
நைனிகா பேச்சு
இந்த நிலையில் தனது அம்மா குறித்து நைனிகா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில், தனது அம்மா சின்சியாரானவர், கடின உழைப்பாளி என்றும் கூறியுள்ளார் நைனிகா. தனது அப்பா இறந்த பிறகு தனது அம்மா மன வேதனையில் பல முறை அழுததாகவும், தனக்கு தெரியாமல் அழுததாகவும் தெரிவித்த நைனிகா, நான் உங்களை சந்தோஷமாக பார்த்துக் கொள்கிறேன் அம்மா என்று கூறினார்.
அம்மாவுக்கு தேவையான அனைத்தையும் செய்வேன் என்றும், இப்போது முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் அம்மாவை நல்லபடியாக பார்த்துக்கொள்வேன் என்றும் தெரிவித்தார். மேலும் பல நியூஸ் சேனல்களில் தனது அம்மா குறித்து தவறான செய்திகள் வருவதாகவும், தன்னுடைய அம்மா பற்றி தவறாக பேச வேண்டாம் என்றும் கூறினார் நைனிகா.
தன்னுடைய அம்மா ஒரு ஹீரோயினாக இருக்கலாம், ஆனால் அவரும் ஒரு ஹியூமன்தான் , அவருக்கும் ஃபீலிங்ஸ் உண்டு. ஆகையால் அவரைப் பற்றி தவறாக பேச வேண்டாம் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
