மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

Madurai Meenakshi Temple
By Fathima Apr 28, 2026 04:05 AM GMT
Report

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனையொட்டி கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் பல வண்ண மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் | Meenakshi Marriage Madurai Chithirai Thiruvizha

இதனை தொடர்ந்து திருமணமான பெண்கள் தங்களது மாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொண்டு வழிபட்டனர்.

திருக்கல்யாண நேரத்தை தவறவிட்டால் காலை 10.35 முதல் 11.30 வரை நல்ல நேரமாக கருதப்படுவதால், அந்த நேரத்தில் தாலி கயிறு மாற்றிக்கொள்ளலாம்.

தொடர்ந்து மே 1ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நடைபெறும்.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் | Meenakshi Marriage Madurai Chithirai Thiruvizha