கமலுடன் ஒருநாளாவது இருக்க வேண்டும் - மனம் திறந்த இளம்நடிகை!
கமல் உடன் ஒரு நாளாவது உதவியாளராக இருக்க வேண்டும் என இளம் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்புக்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கமலை பார்த்து பலர் சினிமாவுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் வெள்ளித்திரையில் நுழைந்துள்ளனர்.
உலகளவில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். நடிப்பைத் தொடர்ந்து தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு வேலைகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது.
மீனாட்சி கோவிந்தராஜன்
இந்நிலையில், கோப்ரா, கென்னடி கிளப் பட புகழ் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும், அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது.
அது மட்டுமின்றி கமல் உடன் ஒரு நாளாவது உதவியாளராக இருக்க வேண்டும். அவர் படத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார் என அருகில் இருந்து பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
