விஜய் படத்தில் நடித்ததால் மன உளைச்சல் - மீனாட்சி சௌத்ரி வேதனை
விஜய் படத்தில் நடித்தது குறித்து மீனாட்சி சௌத்ரி பேசியுள்ளார்.
மீனாட்சி சௌத்ரி
விஜய் ஆன்டனி மூலம் கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சௌத்ரி.
அதன் பிறகு ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்த இவர், கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் நடித்தன் மூலம் பிரபலமடைந்தார்.
கோட் படம்
கோட் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஏறக்குறைய 300 கோடிக்கு மேல் வசூல் படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து மீனாட்சி சௌத்ரி பேசியுள்ளார்.
கோட் படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக சில காட்சிகளில் வரும் மீனாட்சியை இதற்கு படத்தில் நடிக்காமலே இருந்திருக்கலாம் என சமூகவலைத்தளங்களில் பலரும் ட்ரோல் செய்தனர்.
இது குறித்து பேசிய மீனாட்சி சௌத்ரி, "விஜய்யுடன் கோட் படத்தில் நடித்ததற்காக பலரும் இணையத்தில் என்னை ட்ரோல் செய்தனர். இதனால் ஒரு வாரம் மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால், துல்கர் சல்மானுடன் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை பார்த்து விட்டு பலரும் பாராட்டினார்கள். அதன்பிறகே இனி நல்ல கதை அம்சம் உள்ளபடங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன்" என தெரிவித்துள்ளார்.