மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: சித்திரை வீதிகளில் தடை

Madurai Meenakshi Temple
By Fathima Sep 14, 2026 05:18 AM GMT
Report

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை சித்திரை வீதிகளில் பக்தர்கள் நின்று விழாவை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகப்பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது.

விழாவில் 2 ஆயிரம் பக்தர்கள், 9 ஆயிரம் விஐபிக்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: சித்திரை வீதிகளில் தடை | Meenakshi Amman Temple Kumbabishekam

காலை 7.40 மணிமுதல் 8.10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும், விழாவில் பங்கேற்ற பாஸ் பெற்றவர்கள் மட்டுமே சித்திரை வீதிகள் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மற்றவர்கள் சித்திரை வீதிகளில் தடை விதிக்கப்படுவார்கள், இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் குடமுழுக்கு விழா முடிந்த பின்னர் சூழ்நிலையை பொறுத்து மற்ற பக்தர்கள் போலிசாரால் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: சித்திரை வீதிகளில் தடை | Meenakshi Amman Temple Kumbabishekam