மீனாட்சி அம்மனின் தோளில் தவமிருக்கும் பச்சை கிளி: ஆச்சரியத்தில் மூழ்கிய பக்தர்கள்
திருத்தங்கலில் அமைந்திருக்கும் கருநெல்லி நாதர் ஆலயத்தில் உள்ள மீனாட்சியம்மன் சிலையின் தோளில் அமர்ந்து கொண்டு பச்சை கிளி தவம் செய்து வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. விருதுநகரிக் திருத்தங்கலில் கருநெல்லிநாதர் ஆலயம் அமைந்துள்ளது, இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலையில் வலப்பக்கத்தில் பச்சை கிளி ஒன்று அமர்ந்திருந்துள்ளது.
ஒரு வார காலமாகவே, அம்மனுக்கு அபிசேகம் முடிந்ததும் எங்கிருந்தாலும் பறந்து வந்து தோளில் அமர்ந்து கொள்கிறதாம். பக்தர்களை கண்டோ, பூஜை செய்யும் குருக்களை கண்டோ, அஞ்சாமல் அப்படியே நாள் முழுவதும் தவகோலத்தில் நிற்பதாக இந்த காட்சியை நேரில் பார்த்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவார காலமாகவே தொடரும் இந்த அதிசயத்தை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.