மீனாட்சி அம்மன் கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார், தஞ்சாவூரிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய சசிகலா, ராமநாதபுரத்தின் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தார்.
இதனையடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற வேளையில், நேற்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கிருந்து மதுரை வீரன் கோவிலுக்கு சென்ற பின்னர், திருப்பரங்குன்றம் புறப்பட்டு சென்றார்.