மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் - 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா

Kanchipuram
By Sumathi Dec 26, 2023 08:18 AM GMT
Report

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

மீனாட்சி கல்வி நிறுவனம்

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (MAHER) 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கில் நடைபெற்றது.

meenakshi-academy

இந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனரான தெய்வதிரு. ஏ.என் ராதாகிருஷ்ணன் அவர்களின் தொலைநோக்கு பார்வை தான் MAHER இன் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அன்னாரை நினைவூட்டும் வகையில் விழாவின் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் பட்டமளிப்பு விழா தொடங்கியது.

பட்டமளிப்பு விழா

MAHER இன் இடைக்கால வேந்தரான திருமதி. கோமதி ராதாகிருஷ்ணன் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் இ.என்.டி (E.N.T) ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் பேராசிரியரும் ஆன பத்மஸ்ரீ.டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார்.

MAHER இன் நிர்வாக வேந்தர் திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தனது வரவேற்பு உரையில், 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து இன்று வரை திகழும் இந்நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற பயணத்தைப் பற்றிப் குறிப்பிட்டார்.

மேலும், தேசியக் கல்வி கொள்கைகளோடு ஒன்றியிருக்கும் MAHER இன் கல்வி கொள்கைகளை பற்றியும் உயர்தர கல்வி வழங்குவதில் MAHER இன் அர்ப்பணிப்பை பற்றியும் விக்சித் பாரத் 2047 நோக்கத்தை 2047 நோக்கத்தை செயல்படுத்த நிறுவனத்தின் பங்களிப்பை பற்றியும் எடுத்துரைத்தார். MAHER இன் துணை வேந்தரான பேராசிரியர் டாக்டர் ஆர்.எஸ். நீலகண்டன் அவர்கள்

இந்நிறுவனத்தின் அங்கீகாரங்கள், பாடத்திட்ட மேம்பாடுகள், ஆசிரியர் மேம்பாட்டிற்காகவும் மாணவர் நலனிற்காகவும் எடுக்கப்படும் முனைவுகள், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் நிறுவனத்தின் உள்கட்டமைப்பில் நடைபெற்ற வளர்ச்சிகள், போன்ற முக்கிய சாதனைகளை கொண்ட ஆண்டறிக்கையை வழங்கினார்.