பிரபல நடிகரை காதலித்து திருமணம் வரை சென்று கழற்றி விட்ட நடிகை மீனா..!

Prabhu Deva Meena Tamil Cinema Marriage
By Thahir Jul 22, 2023 09:05 AM GMT
Report

பிரபல நடிகை மீனா நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் வரை சென்று கழற்றிவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குவிந்த பட வாய்ப்புகள் 

1990களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை மீனா தற்போது 40 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் காலுான்றியுள்ளார்.

சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் நடிக்க வந்த அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. பல பட வாய்ப்புகளால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இடம் பிடித்தார் நடிகை மீனா.

Meena who fell in love with a famous actor

இவரின் அழகில் அன்று மயங்காத நடிகர்களே கிடையாது. அந்த வகையில் சில நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீனாவை காதலித்து வந்தததாக அப்போது கிசு கிசுக்கப்பட்டது.

நடிகர்களுடன் கிசு கிசு

அந்த வகையில், நடிகை மீனா மலையாள நடிகர் மோகன்லாலை காதலித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அன்றைய காலகட்டத்தில் கிசுகிசுவாக பேசப்பட்டது.

பின்னர் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் மேல் இவர் காதலில் இருந்து இருக்கிறார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் போன்ற பல பரிமாணங்களை கொண்ட இவருடன் மீனா சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Meena who fell in love with a famous actor

இதன் காரணமாக இப்படி கிசு கிசுக்கப்பட்டது. இதே போன்று பிரபல கன்னட நடிகரான சுதீப்புடன் மீனா ரகசிய திருமணம் என்று கூட செய்திகள் வெளிவந்தது.

பிரபு தேவாவுடன் காதல் 

பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த செய்தியை மீனா மறுத்தது மட்டுமல்லாமல் இது முற்றிலும் வதந்தி என்று கூறினார். இந்த நிலையில் பிரபுதேவாவுடன் நடினை மீனா டபுள்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அப்போது பிரபு தேவாவுக்கு திருமணம் ஆகி இருந்தது.

இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள இந்த ஜோடி முடிவெடுத்த போது மீனாவுக்கு நெருக்கமான தோழிகள் பிரபுதேவாவை நம்ப வேண்டாம் என்று தெரிவித்து தடுத்துள்ளனர்.