வாய்ப்பு கிடைத்தும்... இதுவரைக்கும் விஜய்கூட நடிக்க மறுத்த அந்த பிரபல நடிகை யார்ன்னு தெரியுமா? வெளியான தகவல் - ரசிகர்கள் ஷாக்

Vijay Meena
By Nandhini May 26, 2022 02:03 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய்.

சமீபத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் வசூலில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும், முக்கிய கேரக்டர்களில் நடிகர்கள் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வளவு உச்ச நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் கூட ஒரு நடிகை இதுவரைக்கும் ஹீரோயினாக நடிக்கவில்லை என்ற தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தையிலிருந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர்தான் மீனா. இவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை மீனா, ரஜினி, கமல், விஜய்காந்த், சரத்குமார், அஜித், பிரபுதேவா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், நடிகர் விஜய்யுடன் நடிக்க 3, 4 படங்களில் வாய்ப்பு வந்தபோது, தேதி கிடைக்காத காரணத்தினால் நடிக்க முடியாமல் போனது.

ஆனால், மீனாவின் மகள் ‘தெறி’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். அப்போது மீனாவும், தன்னுடைய மகளுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தனர். அந்த நேரத்தில், நடிகர் விஜய்யிடம் மீனா பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது மீனா பேசும்போது, உங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, என்னிடம் டேட் இல்லை. இப்போ சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன் இங்க. ஆனால், இப்போதும் நாம் இருவரும் இணைந்து நடிக்க முடியவில்லை என்று கூறிக்கொண்டிருந்தாராம்.

அப்போ, உடனே விஜய்... உங்களுக்கு என்னை விட அஜீத்தை தானே ரொம்ப பிடிக்கும். அதனாலதான் என் படங்களில் நடிக்கவில்லை என்று ஜாலியாக கிண்டலடித்தாராம்.   

வாய்ப்பு கிடைத்தும்... இதுவரைக்கும் விஜய்கூட நடிக்க மறுத்த அந்த பிரபல நடிகை யார்ன்னு தெரியுமா? வெளியான தகவல் - ரசிகர்கள் ஷாக் | Meena Vijay

வாய்ப்பு கிடைத்தும்... இதுவரைக்கும் விஜய்கூட நடிக்க மறுத்த அந்த பிரபல நடிகை யார்ன்னு தெரியுமா? வெளியான தகவல் - ரசிகர்கள் ஷாக் | Meena Vijay