ஈபிள் டவரில் உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்த முதல் தமிழ் நடிகை - யார் தெரியுமா?
உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகை மீனா.
உலகக் கோப்பை 2023
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி போட்டிகள் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் குறித்த அட்டவணையும் சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சி முகாமை தொடங்கினர்.
இதில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அறிமுகமாக ஏற்கனவே உலகக்கோப்பையை விண்வெளியில் அறிமுகம் செய்தது ஐசிசி.
நடிகை மீனா
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் நடிகை மீனா. இதனால் உலகக் கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை மீனா பெற்றுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மீனா 'உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி' என்று தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையுடன் மீனா இருக்கும் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம் IBC Tamil