அப்பா இல்லாத முதல் பிறந்த நாள் கொண்டாடிய நைனிகா... - உருகிய மீனா...!
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
வித்யாசாகர் மரணம்
நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.
மீனாவுக்கு மறுமணமா?
கணவர் உயிரிழப்பால் மீனா சோகத்தில் இருந்து வந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார். சமீபத்தில் நடிகை மீனாவின் 2வது திருமணம் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மீனா குடும்ப நண்பரை திருமணம் செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் பரவியது. ஆனால், பரவி வரும் இச்செய்தி வெறும் வதந்தி என்று நடிகை மீனா இத்தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அப்பா இல்லாத முதல் பிறந்த நாள்
இந்நிலையில், நேற்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகை மீனா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், கப்பலின் மேல் தளத்தில் மீனாவின் மகள் துள்ளிக்குதித்து ஓடி வருகிறார். உயரமாக பறக்க வேண்டும் என் மகளே... வானம் எல்லை இல்லை... நீ எப்போதும் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும்... உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யவும்... என் உயிரின் காதலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என பதிவிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்களுக்கு மீனாவின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
Fly high my baby, sky is not the limit. May you always shine like the sun and illuminate the lives of those around you. Happy birthday to the love of my life ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/0XBtc1HTKP
— Meena Sagar (@Actressmeena16) January 1, 2023