ஹீரோ'னா ஓகே...ஹீரோயின்'னா மட்டும் ஏன் இப்படி..? எரிச்சலான மீனா
நடிகை மீனா இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வதை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மீனா
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் மீனா. முன்னணி நடிகையாக இருந்து தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் மீனா, தமிழில் தயாராகி வரும் "ரவுடி பேபி" படத்தில் பிஸியாக இருக்கின்றார்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் 2021-ஆம் ஆண்டு மரணமடைந்தது தொடர்ந்து மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா.? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகின்றது. அதற்கு பல சமயங்களில் மீனாவும் வெளிப்படையாகவே பதிலளித்துள்ளார்.
ஆனால், தற்போது அவர் தனது மகள் நைனிகாவின் எதிர்காலம் குறித்து ஆழமாக சிந்தித்து வரும் நிலையில், இரண்டாவது திருமணம் பற்றிய யோசனை தனக்கில்லை என்று அழுத்தமாகவே தெரிவித்துள்ளார்.
ஹீரோயின்'னா மட்டும்
இந்நிலையில், தான் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு ஹீரோ தனிமையில் இருந்தால், அவரை பற்றி அவதூறான வதந்திகள் பரவுவதில்லை என்று சுட்டிக்காட்டி, ஒரு ஹீரோயின் கணவனை இழந்து தனிமையில் இருந்தால் தான் மட்டும் ஏன் இப்படி என கேள்வியை எழுப்பினர்.
ஏராளமான பெண்கள் கணவனை இழந்து தனிமையில் இருப்பவர்கள் என்று குறிப்பிட்ட மீனா, தனியாக வாழ முடியும் என்று கூறி, எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி கவலை இல்லை என்றும் எந்த யோசனையும் இல்லை என்பர் கூறினார்.