விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கமலா ஹாரிசின் உறவினர்

attack democracy violence
By Jon Feb 05, 2021 02:41 AM GMT
Report

இந்தியாவில் நடைபெற்று வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. இந்திய அளவில் மட்டுமே இருந்துவந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பான விவாதங்கள் தற்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஹாலிவுட் பாடகி ரிஹானா விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளியிட்ட ட்வீட் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவரைத் தொடர்ந்து சூழலியல் செயற்பாட்டாளர் க்ரேட்டா தன்பர்க் மற்றும் மியா கலிஃபா போன்றோர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் உறவினரான மீனா ஹாரிசும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிசின் சகோதரி மகளாக மீனா ஹாரிஸ் அமெரிக்காவில் வழக்கறிஞராக உள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ”அமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தான் இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இரண்டுமே சம்மந்தப்பட்டது தான்.

இணைய சேவையை துண்டித்து விவசாயிகளுக்கு எதிராக துணை இராணுவப் படையை பயன்படுத்தி வரும் இந்திய அரசின் செயல்களைக் கண்டு நாம் அறச்சீற்றம் அடைய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்