பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமலா ஹாரிசின் உறவினர் மீனா ஹாரிஸ்

Israel Kamala Harris Palestine Meena harris
By mohanelango May 13, 2021 07:13 AM GMT
Report

இஸ்ரேல் - பாலஸ்தீன் நாடுகளுக்கு இடையே கடந்த சில தினங்களாக பதற்றம் நிலவி வருகிறது. காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகள் பதிலடி கொடுத்துள்ளன.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தற்போது வரை உயிரழந்துள்ளனர், இதில் குழந்தைகளும் அடங்குவர். பலரும் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல உலக நாடுகளும் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தணித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன. அமெரிக்காவும் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் இஸ்ரேலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. 

இதனை பலரும் கண்டித்து வருகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுப்போம் என ஹமாசும் அறிவித்துள்ளது. இதனால் மோதல் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே பல தரப்பும் கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாலஸ்தீன் மக்களுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் உறவினர் மீனா ஹாரிஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். 

வழக்கறிஞரும், எழுத்தாளருமான இவர் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அநீதி நடக்கும்போது நடுநிலையாக இருந்தால் நீங்கள் தவறு செய்பவனின் பக்கம் நிற்கிறீர்கள். நான் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இவர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசை கடுமையாகவும் விமர்சித்து வந்தார்.