காப்பாத்தவே முடியாது; ஆனால், கல்யாணம் பண்ணிட்டாரு - நடிகை மீனா
நெப்போலியன் மகன் திருமணம் குறித்து நடிகை மீனா மனம் திறந்துள்ளார்.
நடிகை மீனா
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணத்தில் கலந்துக்கொள்ள நடிகை மீனா ஜப்பானுக்கு சென்றிருந்தார். தொடர்ந்து திருமணத்தில் இரவு நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நடனமும் ஆடினார்.
மேலும், 3 நாட்கள் ஜப்பானை சுற்றிப் பார்க்க நெப்போலியன் ஏற்பாடு செய்த நிலையில், சரத்குமார், ராதிகா, குஷ்புவுடன் இணைந்து என்ஜாய் செய்த வீடியோக்களையும் மீனா வெளியிட்டு வந்தார்.
தனுஷ்-அக்ஷயா
இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள மீனா, பெரிய பெரிய மருத்துவர்களே தனுஷை குணப்படுத்த முடியாது என கைவிரித்த நிலையில், காப்பாத்தவே முடியாது என்கிற நிலைமையில் இருந்த ஒருவருக்கு கல்யாணமே செய்து முடித்துவிட்டார் நெப்போலியன். அவரை போல ஒரு சிறந்த தந்தை இருக்கவே முடியாது.
தனுஷ் ரொம்பவே ஸ்மார்ட்டான பையன். எல்லா விஷயத்தையும் நன்கு தெரிந்து வைத்திருப்பவர். அதே போலத்தான் அக்ஷயாவும் அவர் ஒரு இன்னொசன்ட்டான பொண்ணுன்னு நினைத்துவிட வேண்டாம். தனக்கு ஏது தேவை என்பதை நன்கு அறிந்துக் கொண்டு செயல்படும் நல்ல தெளிவான பொண்ணு தான் அக்ஷயா எனத் தெரிவித்துள்ளார்.