சீமானால் கருக்கலைப்பு நடந்ததா..? விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை..!
நடிகை விஜயலக்ஷ்மி நாம் தமிழர் சீமான் மீது அளித்த புகாரில், 6 முறைக்கு மேல் சீமானால் தான் கருக்கலைப்பு செய்துள்ளதாக குறிப்பிட்ட நிலையில், அவருக்கு தற்போது மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
சீமான் விஜயலக்ஷ்மி
நடிகை விஜயலக்ஷ்மி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்திருக்கும் நிலையில், தற்போது அது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக நடிகை விஜயலக்ஷ்மியிடம் நீண்ட விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டதற்கு பிறகு விஜயலக்ஷ்மி, திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தையும் அளித்திருந்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகை விஜயலக்ஷ்மியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, இது தேவையற்ற கேள்வி என கூறிய சீமான், இதே மாதிரியான குற்றசாட்டு பல பேர் மீதுள்ளது என சுட்டிக்காட்டி, தேவையில்லாத விஷயத்தை ஏன் பேச வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
மருத்துவ பரிசோதனை
தொடர்ந்து சீமான் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பதில் தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம விஜயலக்ஷ்மியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தான், விஜயலட்சுமியின் புகாரின் அடைப்படையில் அவர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார்.சீமான் மீதான பாலியல் புகாரில், 6 முறைக்கு மேல் தன்னை சீமான் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக, விஜயலட்சுமி குறிப்பிட்டு இருந்தார்.