மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீடு - உயர்நீதிமன்றம் கேள்வி?

highcourt medicalstudy
By Irumporai Aug 03, 2021 08:45 AM GMT
Report

மருத்துவபடிப்பு அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் வருகிறதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவபடிப்பில் மாணவர் சேர்க்கையில்,அகில இந்திய இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடுகள் முறையாக வழங்கப்பட வேண்டும்,குறிப்பாக தமிழக அரசுக்கு 69% ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்று கடந்த ஆண்டு திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு மாணவர் சேர்க்க அமல்படுத்த முடியாது என்பதால் மத்திய ,மாநில அரசுகள் இணைந்து ஒரு குழு அமைத்து 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

ஆனால்,குழு மட்டும் அமைக்கப்பட்டு,பரிந்துரைகள் வழங்கப்பட்டு,அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில்,இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை.

இந்த நிலையில்,இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு குறிப்பாக 50% இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,தற்போது 10% மட்டுமே ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனால்,50 சதவீதத்தில்  10% ஒதுக்கீடு என்பது 50% இட ஒதுக்கீட்டில் வருமா? அல்லது தனியே வருமா? என்று மத்திய அரசிடம் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பி வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.