மருத்துவ கலந்தாய்வை தமிழ்நாடு அரசே நடத்தும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நடப்பாண்டில் மருத்துவக் கலந்தாய்வை மாநில அரசே நடத்தும், அதனை ஒன்றிய அரசுஉறுத செய்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவகலந்தாய்வு
அதாவது, நாட்டில் உள்ள 100% மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே கலந்தாய்வு நடத்த சமீபத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனை பெற்று ஒன்றிய அரசுக்கு ஆட்சேப கருத்து அனுப்பப்பட்டது என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் 3 தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதால், 450 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் மருத்துவ படிப்புக்கு மொத்தம் 1,07,658 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 20 அரசு கல்லூரிகள் உட்பட புதிதாக 50 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.