ராக்கிங் கொடுமையால் மருத்துவ மாணவி உயிரிழப்பு - வாட்ஸ் அப் உரையாடலால் சிக்கிய சீனியர்
தெலுங்கானாவில் மாணவி ஒருவர் ராக்கிங் கொடுமையால் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி உயிரிழப்பு
காகடிய மருத்துவ கல்லுாரியில் ப்ரீத்தி என்ற 26 வயதான இளம் பெண் முதலாம் ஆண்டு முதுகலை படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவிக்கு சீனியர் மாணவர்கள் ராக்கிங் என்ற பெயரில் துன்புறுத்தி உள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் கடந்த புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
எம்ஜிஆர் மருத்துவமனையில் இரவு பணியின் போது அவர் மயங்கி விழுந்துள்ளார்.இதையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவியின் மொபைல் போனை கைப்பற்றிய போலீசார், அவரின் வாட்ஸ் அப் உரையாடல்களை எடுத்து பார்த்த போது மாணவிக்கு சீனியர் மாணவர்கள் துன்புறுத்தியது தெரியவந்துள்ளது.
சீனியர் மாணவர் கைது
இதையடுத்து மாணவியை துன்புறுத்திய இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டதாரி மாணவன் முகமது அலி சைஃப் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ராகிங், தற்கொலைக்குத் தூண்டுதல், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவன் மீது கல்லுாரி மற்றும் மருத்துமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
ராக்கி கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.