கரூர் மக்கள் சந்திப்பில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
Karur
By Fathima
கரூரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை தனிவிமானம் மூலம் திருச்சி சென்றடைந்த முதலமைச்சர் விஜய் அங்கிருந்து கார் மூலம் கரூர் வந்தடைந்தார்.
அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் 5000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களுக்கென்று தனியாக பாஸ் வழங்கியும் அனுமதி மறுக்கப்படுகிறதாம், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவரையும் போலிஸ் அதிகாரிகள் வெளியேற்றி வருவதாக கூறப்படுகிறது.