ரூ.95.21 கோடி மதிப்பில் தாம்பரம் - வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

M K Stalin Chennai
By Swetha Subash May 13, 2022 08:00 AM GMT
Report

ரூ.95.21 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் - வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.

தாம்பரம் – வேளச்சேரி இடையே மேடவாக்கத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். திறந்து வைத்த மேம்பாலத்தில் முதலமைச்சர் வாகனம் பயணம் செய்தது. 2.03 கிலோ மீட்டர் நீளமும், 11மீ அகலமும் கொண்ட மேடவாக்கம் மேம்பாலம் சென்னையின் மிக நீளமான மேம்பாலம் ஆகும்.

ரூ.95.21 கோடி மதிப்பில் தாம்பரம் - வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்! | Medavakkam Flyover Bridge Opened My Mk Stalin

ரூ.95.21 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என கூறப்படுகிறது. புதிதாக திறக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலத்தின் ஒருபகுதியான வேளச்சேரி – தாம்பரம் ஒருவழி பாலம் கடந்தாண்டு திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.