செக்ஸ் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள பெண்களுக்கு அழைப்பு விடுத்த பீட்டா..!
இறைச்சி சாப்பிடும் ஆண்களிடம் பாலியல் உறவு கொள்ளாமல், ‘செக்ஸ் ஸ்டிரைக்’ நடத்த பெண்களுக்கு பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
‘செக்ஸ் ஸ்டிரைக்’
உலகம் முழுவதும் விலங்குகள் நலனுக்காக அமைக்கப்பட்ட ‘பீட்டா’ நிறுவனம் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகிறது.

உலகம் முழுவதும் இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படுவதை அவ்வப்போது பீட்டா கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது திடீரென இறைச்சி சாப்பிடும் ஆண்களிடம் பாலியல் உறவு கொள்ள வேண்டாம் என்று செக்ஸ் ஸ்டிரைக் நடத்த பெண்களுக்கு பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது
பெண்களை விட ஆண்கள் அதிக இறைச்சி உணவு சாப்பிட்டு, காலநிலை பேரழிவுக்கு வழிசெய்வதால், உலகை காப்பாற்ற இந்த ஸ்டிரைக்கில் சர்வதேச அளவில் பெண்கள் பங்கேற்க கோரிக்கை விடுத்துள்ளது.