சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு
சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் தமிழ் பண்பாட்டுதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை,கோவைக்கு இணையாக மதுரை, தூத்துக்குடி தொழில் வழிச்சாலையை மேம்படுத்த தொழில் துறை திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும் தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்றவற்றை கொண்டு வரவும், மதுரையை மையமாக கொண்டு தொழில் சார்ந்த வல்லுநர்கள், நிறுவங்களை உள்ளடக்கிய ஃபோரம்( forum) அமைத்து தொழில் சாத்தியக்கூறுகள் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து தொழிற்கொள்கை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.