மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு
மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடந்து வருகிறது.
மதிமுகவில் 3 மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டம் கூடியுள்ளது.
திமுகவுடம் மதிமுகவை இணைக்க 3 மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். கட்சிக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் இருக்கும் நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த மாதிரியான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இக்கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில், மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவை பொதுக்குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.
இரண்டு துணை பொதுச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆடுதுரை முருகனும், ராஜேந்திரனை தேர்வு செய்து இந்த பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இக்கூட்டத்தில் துரை வைகோ தலைமை கழகச் செயலாளராக பொதுக்குழு தேர்ந்தெடுத்தற்கு மதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து ஆரவாரம் செய்தனர்.