தமிழக ஆளுநரை நீக்க வேண்டும் - அதிரடியாக தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம்!

Vaiko Tamil nadu R. N. Ravi
By Vinothini Jun 19, 2023 05:33 AM GMT
Report

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பொறுப்பில் இருந்து அகற்றவேண்டும் என கூறி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

நீக்க வேண்டும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பொறுப்பிலிருந்து அகற்றக் கோரி மதிமுக சார்பில் ஜூன் 20-ல் கையெழுத்து இயக்கம் நடைபெறும். சென்னையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

mdmk-signature-campaign-to-remove-governor

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், மதிமுகவின் 29-வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்ற கோரி கையெழுத்து இயக்கத்தை மதிமுக 20.06.2023 அன்று காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் தொடங்கி நடத்துகிறது.

இயக்கம்

இதனை தொடர்ந்து, சென்னையில், தலைமைக் கழகம் அமைந்துள்ள தாயகத்தில் இந்த நிகழ்சனி நடைபெற உள்ளது. இதனை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்.

mdmk-signature-campaign-to-remove-governor

இவை கோவை, கடலூர், தென்சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருநெல்வேலி, கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.