செப்டம்பர் 15 ஆம் தேதி திருச்சியில் மதிமுக மாநாடு
செப்டம்பர் 15 ஆம் தேதி திருச்சி, சிறுகனூரில் மதிமுக சார்பில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் மாநாடு நடைபெற உள்ளது.
திருச்சி மதிமுக மாநாடு
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் மாநாடு, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி, திருச்சி சிறுகனூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற உள்ளது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி ஆகியோர் தலைமையில் மதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
மாநாட்டு திடலுக்கு வருகை தந்த துரை வைகோ எம்.பி, மாநாட்டு மேடை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, வாகன வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
மாநாட்டிற்கான கொள்கை முழக்கத்துடன் கூடிய டீசர்ட்டை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிமுகம் செய்தார்.