ஆளுநருக்கு எதிரான போராட்டம்... வைகோ அதிரடி கைது
சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது தொண்டர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.
போராட்டம்
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையின் முன்பாக இன்று மதிமுக சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்துள்ளது. தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த தமிழக ஆளுநரின் செயலை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்து குறிப்பிட்ட ஆன்மீக வட்டத்திற்குள் அடங்குபவர் போன்று கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தமிழ் மற்று உலகப் பொதுமறையாக இருக்கும் திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து போராட்டத்தை வைகோ அறிவித்தார்.

கறுப்பு கொடிகளுடன் மதிமுக தொண்டர்கள்
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை நோக்கி வைகோ மற்றும் அவரது தொண்டவர்கள் பேரணியாக புறப்பட்டதுடன், தமிழுக்கும் தமிழர்களுக்கு மதச்சாயம் பூசாதே... ஆளுநரே தமிழகத்தை விட்டு வெளியேறு என்று கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
அசம்பாவிதத்தினை தடுப்பதற்கு ஆளுநர் மாளிகையை சுற்றி போலிசார் குவிக்கப்பட்டதுடன், இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் போலிசாருடன் தள்ளுமுள்று ஏற்பட்ட நிலையில், சட்ட ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை மதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.